Advertisement

பிறந்த மண்ணில் வரலாறு படைத்தார்

பொது டிசம்பர் 04,2021 | 15:23 IST

Share

இந்தியா, நியூசிலாந்து அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் சதமடித்தார். 2வது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியா, 325 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர் அஜாஸ் படேல் எடுத்தார். கார்டு 47.5 ஓவரில் 12 ஓவர் மெய்டன் 119 ரன் கொடுத்து 10 விக்கெட் இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சிங் 10 விக்கெட்டையும் எடுத்த 3வது வீரர் என்ற சிறப்பை அஜாஸ் படேல் பெற்றார். இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், 1956ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டிலும் 1999ல் இந்தியாவின் அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டிலும் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தினர். 33 வயது நிரம்பிய அஜாஸ் படேல் மும்பையில் பிறந்தவர். பிறந்த மண்ணிலேயே மிகப்பெரிய சாதனை படைத்த அஜாஸ் படேலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. 10 விக்கெட் சாதனை படைத்த லேக்கர், கும்ப்ளே, அஜாஸ் மூவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X