Advertisement

திமுகவுக்கு எதிராக பள்ளிகள்?

அரசியல் டிசம்பர் 07,2021 | 10:24 IST

Share

மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் சுயநிதி பள்ளிகள், எல்கேஜி - ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும். அந்த கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இதன்படி, கடந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, 419 கோடி ரூபாய் நிதியை பள்ளிகளுக்கு வழங்க, அக்டோபரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிதி வழங்கப்படவில்லை. இப்போது தனியார் பள்ளிகளுக்கு, செக் வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில் கோவிட் காலத்தில் 75 சதவீத கட்டணம் மட்டுமே பள்ளிகள் வசூலிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, கட்டாய கல்வி சட்ட நிதியிலும், 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் அதிருப்தியில் உள்ளன. திமுக ஆட்சியில், அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பதில், தனியார் பள்ளிகளின் செயல்பாட்டை ஒடுக்கும் விதமான செயல்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X