Advertisement

வேகமாக ஓட்டாத பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர் கைது

பொது டிசம்பர் 14,2021 | 10:16 IST

Share

ஈரோடு மாவட்டம் பனக்கள்ளி கிராமத்தில் இருந்து தாளவாடிக்கு , அரசு பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இதன் பின்னால் பைக்கில் வந்த 35 வயது சிவநாதன் என்பவர் ஓவர் டேக் செய்ய முயன்றார். ஆனால் முடியவில்லை. பஸ் வேகமாகவும் போகவில்லை. அவர் அவசர வேலையாக செல்ல வேண்டி இருந்ததால் கடுப்பாகினார். மல்லன்குழி ஸ்டாப்பில் பஸ் நின்ற போது, சிவநாதன் அதில் ஏறினார். டிரைவர் அன்பரசுவை கீழ் இறக்கிவிட்டு , குழியில் தள்ளி தாக்கினார். பயணிகள் சண்டையை தடுத்தனர். இளைஞரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். படுகாயம் அடைந்த டிரைவரை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். புகார் கொடுத்தும் , இளைஞரை ஒப்படைத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் , தாளவாடியில் பஸ்களை இயக்காமல் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X