பொது டிசம்பர் 20,2021 | 20:25 IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்ல வசதியாக ஜனவரி 11 முதல் 13ம் தேதி வரை 16 ஆயிரத்து 768 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 300 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 6,468 பஸ்களும் இயக்கப்படும். சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர வசதியாக, ஜனவரி 16 முதல் 18ம்தேதி வரை 16,709 பஸ்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகரில் சிறப்பு பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து