பொது டிசம்பர் 22,2021 | 11:35 IST
டோல்கேட் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த வருவாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து,போக்குவரத்து அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதனால், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அபரிமிதமாக இருக்கிறது என்று கட்கரி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து