அரசியல் டிசம்பர் 22,2021 | 13:09 IST
பாஜ தலைவர் ரஞ்சித் கொலை SDPIயை சேர்ந்த 5 பேர் கைது கேரளாவின் ஆலப்புழாவில் சனிக்கிழமை இரவு, எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் ஷான் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக அடுத்த 12 மணி நேரத்துக்குள் பாரதிய ஜனதாவின் ஓபிசி பிரிவு செயலாளர் ரஞ்சித் சீனிவாசை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொன்றனர். மனைவி, தாய் கண்முன் இந்த கொலை நடந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் அரசியல் பிரச்னையாக மாறியது. வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க பாஜ வலியுறுத்தியது. ஆலப்புழா மாவட்டம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி பலரை பிடித்து விசாரித்தனர். ரஞ்சித் கொலை தொடர்பாக ஆசிஃப், அலி அகமது, நிஷாத், அர்ஷத் நவாஸ், சுதீர் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து