சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 22,2021 | 16:00 IST
பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயிக்கப்பட்டது. அது எப்போது எப்படி வரும் என்பது எவரும் அறிந்திடாதது. வசதி படைத்தோர் வீட்டில் இறப்பு நேர்ந்தால், உற்றார் உறவினர் உதவியுடன் இறுதி சடங்கு தங்கு தடையின்றி நடக்கிறது. இது இல்லாதவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ஓடோடி உதவுகிறது கோவை தாய்மை அறக்கட்டளை.இதனை சேவையாக செய்வதால் வாடகை பணம் எதுவும் வாங்குவதில்லை. விருப்பப்பட்டால் பிறருக்கு உதவும் வகையில் அறக்கட்டளைக்கு தேவையான பொருட்களாக வாங்கி கொள்கின்றனர். ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சாரதா, லேப் டெக்னீசியன் மகேஸ்வரி, தையல் கலைஞர் மேனகா ஆகிய மூவரையும் இறுதிச்சடங்கு சேவை ஒரே புள்ளியில் இணைக்கிறது. மேலும் சில உறுப்பினர்களுடன் சேர்ந்து இதுவரை ஆதரவற்றவர்கள் சுமார் 700 பேரை இவர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து