பொது டிசம்பர் 25,2021 | 08:26 IST
திண்டுக்கலில் 1866ம் ஆண்டு கட்டப்பட்ட புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது . நள்ளிரவில் இயேசு பிறந்து காட்சி தருவது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.கேக் கொடுத்து கிறிஸ்துமசை கொண்டாடினர். புதுக்கோட்டையில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இயேசு பிறந்தது போல் மின் விளக்குகளால் அலங்கரித்த குடில் அமைத்து பாடல் பாடி கொண்டாடினர். நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினர். கோவிட் காரணமாக கேரல் பவனிக்கு அனுமதி இல்லை . மினி வாகனங்களில் சென்று பவனிகளை நடத்தினர். மாவட்டத்தில் 1500க்கு மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர்.
வாசகர் கருத்து