சம்பவம் டிசம்பர் 25,2021 | 09:16 IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இடுவாய் அரசு உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை கீதா. மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கட்டாய படுத்தியுள்ளார். சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தினார். புகாரின் பேரில் பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கீதாவை தற்காலிக பணி நீக்கம் செய்தனர். மங்கலம் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் உள்ள சரவணகுமார் என்பவர் மாணவிகள் சார்பாக புகார் அளித்தார். வன்கொடுமை தடுப்ப்பு சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரயை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து