அரசியல் ஜனவரி 03,2022 | 23:01 IST
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பல கோடி பெண்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மசோதா இது. இந்த விவகாரத்தில் பல தனிநபர் சட்டங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால், அதுபற்றியெல்லாம் தீர ஆராய்ந்து திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்க பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளது. மசோதாவை ஆராயும் நிலைக்குழுவில் 31 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒரே ஒரு பெண் எம்பிதான் உள்ளார். இந்தப் பிரச்னையை ராஜ்ய சபா தலைவர் வெங்கய்யா நாயுடு கவனத்துக்கு சிவசேனா எம்பி பிரியங்கா சவுத்ரி கொண்டு சென்றுள்ளார்.
வாசகர் கருத்து