அரசியல் ஜனவரி 04,2022 | 23:40 IST
முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அண்ணா சாலையில் சென்றபோது, பலர் மாஸ்க் அணியாமல் நடமாடுவதைக் கண்டார். உடனே காரை விட்டு இறங்கினார். மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் வழங்கினார். சென்னையில் பாதிப்பு அதிகரிக்கிறது; தயவுசெய்து மாஸ்க் அணியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். ஸ்டாலினை பார்த்ததும் சிலர் ஓடிவந்து மாஸ்க்கை கேட்டு வாங்கினர்.
வாசகர் கருத்து