பொது ஜனவரி 06,2022 | 10:21 IST
அனுமதியின்றி அரசின் சின்னம், பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்தினால் அதை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 21ம் தேதிக்குள் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து