பொது ஜனவரி 08,2022 | 23:16 IST
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரெவெளியில் வசிப்பவர் முத்தாள் (70). இவருக்கு பிறவியிலேயே வளர்ச்சி குறைபாடு காரணமாக உயரம் குறைவாக காணப்படுவார். இவருடைய பெற்றோர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டனர். மூன்று அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என குடும்பத்தில் ஒன்பதாவதாக கடைக்குட்டியாக பிறந்த முத்தாள், திருமணம் செய்து கொள்ள வில்லை. உடன்பிறந்த மூன்று அண்ணன்களும் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், வெள்ளிரெவெளியில் உள்ள இந்திரா நகரில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கொண்டு தினக்கூலி வேலைக்கும், அக்கம்பக்கத்தினர் வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து கொண்டும், தமிழக அரசு அளிக்கும் முதியோர் உதவித்தொகையை பெற்றும் வாழ்ந்து வருகிறார். . இந்நிலையில்,கடந்த வாரம் கேரள தம்பதிகள் இவருடன் நடத்திய உரையாடலை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். முத்தாள் பாட்டியின் கள்ளம் கபடமற்ற பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாசகர் கருத்து