அரசியல் ஜனவரி 11,2022 | 18:49 IST
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா Swami Prasad Maurya பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், விவசாயிகளை யோகி அரசு புறக்கணிப்பதால் கட்சியை விட்டு விலகியதாக கூறினார். மவுரியாவை தொடர்ந்து, ரோஷன் லால் வர்மா Roshan Lal Varma, பகவதி பிரசாத் சாகர் Bhagwati Prasad Sagar, ராஜேஷ் பிரஜாபதி Brajesh Prajapati ஆகிய 3 எம்எல்ஏக்களும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அவர்களும் சமாஜ்வாடியில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 4 தலைவர்கள் பாஜவுக்கு முழுக்கு போட்டது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து