பொது ஜனவரி 13,2022 | 09:11 IST
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பெரிய கையகம் கிராமம். இங்கு சரக்கு வாகனத்தில் வந்த சிலர் 700 ரூபாய்க்கு டிஏபி உர மூட்டை விற்பனை செய்தனர். விலை குறைவாக கிடைத்ததால் 100க்கும் மேற்பட்டோர் வாங்கினர். மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்கள் நிரப்பி இருந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 1 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை பிடித்து, பணத்தை மீட்டுத்தர போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து