பொது ஜனவரி 14,2022 | 20:12 IST
மதுரை, அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 59 பேர் காயமடைந்தனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் காயமடைந்தனர். இதில் 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை பார்க்க வந்த பாலமுருகன் வயது 18 மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்றிருந்தார். அப்போது வேகமாக வந்த காளை பாலமுருகனின் மார்பில் குத்தியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
வாசகர் கருத்து