Advertisement

இரண்டே நாளில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக்கில் முண்டியடிப்பு

பொது ஜனவரி 14,2022 | 22:48 IST

Share

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு கடந்த 2 நாளில் மட்டும் 358 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. 12 ம் தேதி 155 கோடி ரூபாய்க்கும், 13ம்தேதி 200 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. 15 ம் தேதி திருவள்ளுவர் தினம், 16 ம் தேதி முழு ஊரடங்கு, 18 ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாள் மதுக்கடைகள் மூடப்படும், என அரசு அறிவித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்து மதுபாட்டல்களை வாங்கினர். மாஸ்க் போட்டுவந்தால்தான் சரக்கு, 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. எல்லா விதிகளும் காற்றில் பறந்தன. இடையில் 17 ம்தேதி ஒருநாள் மதுக்கடைகள் திறந்திருக்கும். அன்றும் விற்பனை கடுமையாக இருக்கும் என்பதால் இந்தாண்டு பொங்கலுக்கு மது விற்பனை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

lana
lana , . 15-ஜன-2022 | 10:51:56 IST Report Abuse

இப்பொழுது எல்லாம் கரோணா பரவாது. கோவில் திறந்தால் மட்டும் பரவிடும்

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X