சம்பவம் ஜனவரி 15,2022 | 18:55 IST
பசுபிக் தீவு நாடான டோங்காவில் கடலுக்கு அடியில் எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கரும்புகை பரவியது. எரிமலை வெடித்தபோது கடற்கரையில் இருந்த வீடுகள் குலுங்கின. கடல் கொந்தளித்து கரையோர குடியிருப்புகளில் சுனாமி அலைகள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். சிறிது நேரத்தில் நிலைமை சரியானது. மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் டோங்கோ, நியூஸிலாந்து, அமெரிக்காவின் ஒரு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வாசகர் கருத்து