விளையாட்டு ஜனவரி 16,2022 | 07:00 IST
பெங்களூருவில், புரோ கபடி லீக் எட்டாவது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 46-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு பவான் ஷெராவத் 19 புள்ளி பெற்றுத் தந்தார். குஜராத் சார்பில் ராகேஷ் 14 புள்ளி பெற்றார். மற்றொரு லீக் போட்டியில் ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 38-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. #SportsNews #Sport #Dinamalar #ProKabbaddi
வாசகர் கருத்து