அரசியல் ஜனவரி 15,2022 | 23:20 IST
அசாமில், நாகோன் Nagaon மாவட்டம், குமோதகான் என்ற இடத்தில் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அவரது வருகைக்காக, தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிடங்களுக்கு மேலாக, வாகனங்களை போலீசார் நிறுத்தினர். கடுமையான டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஆம்புலென்ஸ்களும் டிராபிக்கில் சிக்கி கொண்டன. இதை கண்ட முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடுப்பானார். அங்கிருந்த போலீஸ் துணை கமிஷனர் நிசார்க் ஹிவாரேவை Nisarg Hivare, அழைத்த அவர், எதற்காக வாகனங்களை நிறுத்தி இருக்கிறீர்கள். இங்க என்ன மகாராஜாக்களா வருகிறார்கள்? என்று திட்டினார். உடனடியாக டிராபிக்கை கிளியர் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து