பொது ஜனவரி 16,2022 | 07:19 IST
தமிழகத்தில் கட்டுமான திட்டங்களுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ மற்றும் நகரமைப்பு துறை டிடிசிபி அனுமதி வழங்குகிறது. இதில் 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி தரலாம். இங்கு உரிய காலத்தில் அனுமதி கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் 1,200 சதுர அடி வரையிலான பரப்பளவு திட்டங்களுக்கு , 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு 2019 ல் அறிவித்தது. மூன்று ஆண்டுகளாக இது கிடப்பில் உள்ளது. தமிழகத்தில் நடுத்தர , குறைந்த வருவாய் பிரிவினர், பெரும்பாலும் 600 முதல் 1000 சதுர அடிக்குள் தனி வீட்டு கட்ட திட்டமிடுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பித்தால், ஒரு ஆண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது என கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர். நில உரிமை தொடர்பான விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தான், இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் , கட்டட அனுமதி தாமதம் ஆகிறது. எனவே 30 நாளில் இது கிடைக்க ஏற்பாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
வாசகர் கருத்து