பொது ஜனவரி 16,2022 | 08:56 IST
இந்தியாவில் கோவிட் முதல் அலையின் போது, பாதிக்கப்பட்ட பலருக்கு நுரையீரல் , சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டது. பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா , அமெரிக்கா , ரஷ்யா , ஜெர்மன் மற்றும் சீனா கவனம் செலுத்தியது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தயாரித்தன. சோதனைகளுக்கு பிறகு மத்திய சுகாதார துறை அங்கீகாரம் வழங்கியது. அதன் பின் மக்களுக்கு செலுத்தும் பணி துவங்கியது. இரண்டாம் அலையில் டெல்டா வகை வைரஸ் பரவிய போதும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த துவங்கினர். ஒமிக்ரான் பரவல் வேகமாக இருந்தாலும் , உடலில் பாதிப்பு அதிகம் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டது தான் அதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகிலேயே இந்தியாவில் தான் 90%த்தும் மேற்பட்டவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். கோவிட் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியாவில் 18 லட்சம் படுக்கைகள் , குழந்தைகளுக்கு 90 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 10 முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி இயக்கம் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.
வாசகர் கருத்து