பொது ஜனவரி 17,2022 | 08:30 IST
மத்திய பிரதேசத்தின் பென்ச் Pench புலிகள் காப்பகத்தில் 16 வயது பெண் புலி இறந்தது. தனது வாழ்நாளில் 29 குட்டிகள் போட்டு 'சூப்பர் மாம்' என்ற பெயரை பெற்றது இந்த புலி. காலர்வாலி என அழைக்கப்பட்ட அந்த புலி வயது மூப்பினால் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூப்பர் மாம் நடமாட்டத்தை கண்காணிக்க 2008ல் அதன் கழுத்தில் ரேடியோ காலர் கட்டப்பட்டது. நீண்ட ஆண்டுகள் ரேடியோ காலருடன் வலம் வந்ததால் அதற்கு காலர்வாலி என்ற பெயரும் உண்டு. சூப்பர் மாமின் இறப்பு விலங்குகள் நல ஆர்வலர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மத்தியப்பிரதேசத்துக்கு புலிகள் மாநிலம் என்ற சிறப்பு கிடைக்க சூப்பர் மாம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாக, மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
வாசகர் கருத்து