பொது ஜனவரி 17,2022 | 08:42 IST
மதுரை, அலங்காநல்லுாரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஆயிரம் காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் களம் காண்கின்றனர். அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடு பிடி வீரர், யாரிடமும் பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகள் மற்றும் வீரர்கள் அனைவருக்கும் அவர்கள் அடக்கும் காளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்க காசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 40-50 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களத்தில் இறங்குவார்கள். அலங்காநல்லூரில் காளைகள் வாடிவாசலிருந்து வந்து இடது புறம் வளைந்து செல்லும் கட்டமைப்பில் உள்ளதால் காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடும்.
வாசகர் கருத்து