பொது ஜனவரி 17,2022 | 10:00 IST
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 2019ல் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பலர், சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதனால், பல ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் போனது. அடுத்த நிலையில் இருந்தவர்கள் பதவி உயர்வு பெற்றனர். அவர்களும் சங்க உறுப்பினராக உள்ளவர்கள் தான்.ஆனால் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. 2019, 2020ல் தயாரிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை, தற்போது பணி இறக்கம் செய்ய பட்டியல் தயாராகி வருகிறது. இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர். நீதிமன்றத்துக்கு சென்று, அரசின் திடீர் பதவி உயர்வு முறையை ரத்து செய்ய தயாராகி வருகின்றனர்.
வாசகர் கருத்து