பொது ஜனவரி 17,2022 | 10:37 IST
தமிழக அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில், 'எஸ்' என்ற முதல் எழுத்தில் துவங்கும் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் தான் வினியோகிக்கப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு, ஆளும் கட்சியின் அதிகார மையத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். கோட்டையிலும் இந்த உத்தரவை வேதவாக்காக கருதி, அமைச்சர்கள் தரப்பிலிருந்து, தங்கள் துறைகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்களாம் இந்த குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வருகிறது. ஆளும் கட்சியின் அதிகாரத்தின் கீழ் செயல்படுவதால், அக்கட்சியினரை மாவட்ட வாரியாக, டீலர்ஷிப் எடுக்கவும் வலியுறுத்தப்படுகிறதாம். இதனால், மற்ற தனியார் குடிநீர் பாட்டில் நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட குடிநீர் பாட்டில் நிறுவனத்தை மட்டும், அரசு பயன்படுத்திக் கொள்வதும், வளர்த்து விடுவதும் எப்படி நியாயம் என்று குமுறுகின்றன அந்நிறுவனங்கள். அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படாமல் இருக்க, தலைமை செயலக உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, கவர்னரை சந்தித்து முறையிட , தமிழக குடிநீர் பாட்டில் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளனர் .
வாசகர் கருத்து