அரசியல் ஜனவரி 18,2022 | 22:30 IST
நாட்டின் கிராமப்புற பகுதிகளில் பிராட்பேண்ட் வயர்லஸ் சேவையை வழங்க தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் Antrix நிறுவனம் 2005ல் ஒப்பந்தம் போட்டது. அதன்படி, 70 மெகாெஹட்ஸ் Megahertz அரியவகை எஸ் பேண்ட் அலைக்கற்றைகளை தேவாஸ் நிறுவனத்துக்கு 1000 கோடி ரூபாய்க்கு வழங்க ஆன்ட்ரிக்ஸ் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் என சர்ச்சை கிளம்பியதும் 2011ல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு ரத்து செய்தது. ஒப்பந்தம் ரத்தானதால் தேவாஸ் நிறுவனத்துக்கு 12 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த ஒட்டுமொத்த மோசடிக்கு காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணம்; இதன்மூலம், நாட்டு மக்களுக்கு அக்கட்சி துரோகம் இழைத்துள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடினார். இயற்கை வளங்களை சொற்ப விலைக்கு காங்கிரஸ் விற்றது எப்படி? என்பதற்கு தேவாஸ் ஒப்பந்தம் சிறந்த எடுத்துக்காட்டு என்றார். தேவாஸ் ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது; ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என கூறி அதை புறக்கணித்துவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதை நிர்மலா சுட்டிக் காட்டினார். சர்வதேச கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்யும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பயன்படுத்தி தேவாஸ் மோசடியை அரசு அம்பலப்படுத்தும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வாசகர் கருத்து