அரசியல் ஜனவரி 19,2022 | 18:27 IST
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டில் எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பதால்தான் தொற்று பரவுகிறது என்று ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தார். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இன்று தினமும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லல்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்? ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக செயல்படுகிறது. மக்களின் உயிரோடு விளையாடாமல் தனது இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தொற்று கட்டுக்குள் வரும் வரை, மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வாசகர் கருத்து