அரசியல் ஜனவரி 19,2022 | 20:42 IST
இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். உத்தரகாண்ட் மாநிலம் பவுரி பகுதியை சேர்ந்தவர் அவர். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்றிய குடும்பத்தில் இருந்து வந்தவர் பிபின் ராவத். அவர் தம்பி விஜய் ராவத்தும் ராணுவத்தில் இருந்தவர். அவர், உத்தரகாண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி Pushkar Singh Dhami முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். பிபின் உத்தரகாண்ட் மாநிலம் குறித்து நிறைய கனவுகளை கொண்டிருந்தார். பிரதமர் மோடி அவற்றை செயல்படுத்துவதால் பாஜவில் சேர்ந்தேன் என விஜய்ராவத் சொன்னார். பிபின் ராவத்தின் தந்தையும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாஜவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து