பொது ஜனவரி 20,2022 | 08:45 IST
ஸ்பெயின் நாட்டின் லியோன் Leon பகுதியில் 1909 பிப்ரவரி 11ல் பிறந்தவர் ஸ்பானியர்டு சாட்டர்னினோ Spaniard Saturnino. உலகின் மிக வயதான மனிதர் இவர். 112 ஆண்டு மற்றும் 111 நாட்களை நிறைவு செய்துள்ளார். 2021 செப்டம்பரில் உலகின் அதிக வயதானவர் என சாட்டர்னினோவை அதிகாரப்பூர்வமாக கின்னஸ் நிறுவனம் அறிவித்தது. இவருக்கு 7 மகள்கள் உண்டு. அவர்கள் மூலம் 14 பேரன், 22 கொள்ளு பேரன்களை கண்டார். 113வது பிறந்த நாளுக்கு சில வாரங்களே இருந்த நிலையில் தற்போது சாட்டர்னினோ வயது மூப்பால் மரணம் அடைந்துள்ளார். மூத்த மனிதரை உலகம் இழந்து விட்டதாக கின்னஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இவரது உயரம் வெறும் 4.9 அடி தான். இதனால் ஸ்பெயின் சிவில் போரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. சோர்ந்துபோகாத சாட்டர்னினோ ஷூ நிறுவனம் நடத்தி வெற்றி கண்டார். யாரையும் துன்புறுத்தும் குணம் அவருக்கு கிடையாது. எனவே தான் இவ்வளவு காலம் வாழ முடிந்தது என கின்னஸ் நிறுவனம் புகழ்ந்துள்ளது. TOI and Guinness web
வாசகர் கருத்து