அரசியல் ஜனவரி 21,2022 | 19:55 IST
ஆந்திராவின் உணவு அமைச்சர் கோடாலி நானிக்கு சொந்தமான திருமண மண்டபம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடியில் உள்ளது. பொங்கலன்று, இந்த மண்டபத்தில், கேசினோ கிளப் போன்று பல கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்ததாக எதிர்கட்சியான தெலுங்கு தேசம் குற்றம் சாட்டியது. அது தொடர்பாக வீடியோ வெளியிட்டனர். அமைச்சரின் திருமண மண்டபத்தை முற்றுகையிட, எம்எல்ஏ உமா மகேஷ்வரர் தலைமையில் தெலுங்குதேசம் கட்சி கட்சியினர், குடிவாடாவுக்கு பேரணியாக சென்றனர். இதை அறிந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குடிவாடாவில் திரண்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. எதிர்கட்சியினரின் வாகனங்கள் கற்கள் வீசி தாக்கப்பட்டன. போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர். breath இச்சம்பவம் தொடர்பாக பேசிய உணவு அமைச்சர் நானி, தமது திருமண மண்டபத்தில் சூதாட்டம் நடந்ததாக நிரூபித்தால், அரசியலை விட்டே விலகி விடுகிறேன். தீக்குளிப்பேன் என்று கூறினார். சந்திரபாபு நாயுடு, வேண்டு
வாசகர் கருத்து