சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 22,2022 | 15:16 IST
கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் பிவின் வயது 18. இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர். சிறுவயது முதலே பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லடாக்குக்கு பைக் பயணம் மேற்கொண்டார். 31 நாட்களில், 6,500 கிலோமீட்டர் துாரம் பயணித்தார். 'இளம் வயதில் நீண்ட தூரம் பைக் ஓட்டிய சாதனையாளர்' என இண்டியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை அறிந்துகொள்ள பயணம் உதவிகரமாக இருந்ததாக பிவின் கூறினார். #Student #Ladakh #bikeRide
வாசகர் கருத்து