பொது ஜனவரி 23,2022 | 22:26 IST
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி டில்லி இந்தியா கேட்டில் முப்பரிமாண ஒளி வடிவிலான நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். வெள்ளைக்காரர்களுக்கு அடிபணிய மறுத்த நேதாஜிக்கு ஹாலோகிராம் சிலைக்கு பதிலாக விரைவில் கிரானைட்டால் ஆன முழு உருவ சிலை அமைக்கப்படும் என்றார், மோடி. இந்தியாவை அசைக்கும் சக்தி உலகில் இல்லை" என நேதாஜி கூறுவார். சுதந்திர இந்தியாவின் கனவுகளை நாம் நனவாக்குவோம். சுதந்திரமடைந்த 100 ஆண்டுக்குள், புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் மோடி கூறினார்.
வாசகர் கருத்து