பொது ஜனவரி 25,2022 | 12:17 IST
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக இருந்தவர் கலைச்செல்வி.வயது 58. கண்காணிப்பாளராக 51 வயது ஜெயஸ்ரீ இருந்தார். நகை மதிப்பீடு செய்பவராக 47 வயது விஜயகுமார் பணிபுரிந்து வந்தார் . மூவரும் 21 பேரிடம் கவரிங் நகை பெற்று 1.64 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதிக்கு விஷயம் தெரிந்தது. வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். டிஎஸ்பி முரளியிடம் விசாரணைக்கு வந்தது. மூவரும் மோசடி செய்தது உண்மை என தெரிந்தது. கலைச்செல்வியை புழல் சிறையிலும் , விஜயகுமாரை செங்கல்பட்டு சிறையிலும் அடைத்தனர். தலைமறைவான ஜெயஸ்ரீயை தேடி வருகின்றனர். மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாசகர் கருத்து