மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2022 | 14:30 IST
களைகட்டிய பொள்ளாச்சி மாட்டு சந்தை கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வாரம் தோறும் செவ்வாய், வியாழன் மாட்டுச்சந்தை நடக்கும். இன்று நடந்த சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டுப்பசு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும், காளை 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரையும், நாட்டு எருமை 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும் விலை போனது. ஜெர்சி மாடு 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. வியாபாரம் களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து