பொது ஜனவரி 25,2022 | 23:12 IST
பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் குலாம் நபி ஆசாத் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பல துறைகளில் சிறந்த பணியாற்றிய 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி Buddhadeb Bhattacharjee உள்ளிட்ட 17 பேருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து