அரசியல் ஜனவரி 26,2022 | 10:12 IST
தெலுங்கானாவில் தேசிய கொடி ஏற்றிவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார் துணை நிலை கவர்னர் தமிழிசை. புதுச்சேரி கடற்கடையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றினார். புதுச்சேரியில் வீர தீர செயல்களுக்காக போலீசாருக்கு விருது வழங்கினார். கோவிட் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. விழாவில் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
வாசகர் கருத்து