பொது ஜனவரி 28,2022 | 08:30 IST
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் விதிகள் புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்தது. பொது நடத்தை விதிகளின்படி, எந்த அரசியல் கட்சியும், வேட்பாளரும் வெவ்வேறு சாதிகள் மற்றும் மதத்தினர், வேறு மொழி பேசும் இனத்தினரிடையே வேறுபாடுகளை அதிகப்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை உருவாக்கும் செயல்களில் ஈடுபடகூடாது. வாக்குகளை பெற சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
வாசகர் கருத்து