பொது ஜனவரி 28,2022 | 08:42 IST
தமிழக அரசின் கலைமாமணி , சிறந்த எழுத்தாளர் உள்ளிட்ட விருதுகளை பெற்ற கவிஞர் வேழவேந்தன், உடல் நலக்குறைவால் சென்னை மயிலாப்பூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. வேழவேந்தன் , கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள காரணி எனும் ஊரில் பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றவர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேச்சால் ஈர்க்கப்பட்டு , திமுகவில் இணைந்தார். தொழிலாளர் நல அமைச்சராக இருந்தவர். மே முதல் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து, அதை சட்டம் ஆக்கியவரும் இவரே. கவிஞர் மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து