அரசியல் ஜனவரி 28,2022 | 09:27 IST
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் நேற்று நடந்த நேர்காணலில், எவ்வளவு பணம் செலவு செய்யப்படும்; வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் போன்ற கேள்விகளை மட்டும் அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுள்ளதால், பணம் படைத்தவர்களுக்கு தான் சீட் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில், 80 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அமைச்சர் கூறியிருந்தார். அப்போது எதிர்க்கட்சி, இப்போது ஆளும் கட்சி என்பதால், போட்டியிட நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது போட்டியிட முன்வந்தவர்களுக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்ற குரல் எழுப்பப்படுகிறது. ஆனால், வேட்பாளரின் பண பலத்தை பார்ப்பதால், அவர்களுக்கு தான் மேலிடத்தில் முக்கியத்துவம் கிடைக்கும் என தெரிகிறது.
வாசகர் கருத்து