சம்பவம் ஜனவரி 28,2022 | 10:00 IST
கோவை நீலம்பூர் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த ஷேக் அலாவுதீன் , ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . மனைவி நெசீலாவுக்கு கடந்த 20 ம் தேதியன்று ஒரு கால் வந்தது. ”அம்மா நாங்க மண் அள்ளும் இடத்துல கூலி வேலை செஞ்சிட்டு இருக்கோம். அப்ப எங்களுக்கு 2 கிலோ தங்கக்கட்டி கிடச்சுது. யார் கிட்ட விக்குறதுன்னு தெரியல” என்றனர். நெசீலா கணவரிடம் விஷயத்தை கூறினார். கால் செய்தவர்களிடம் ஷேக் அலாவுதீன் பேசினார். அவர்கள் கணத்துக்கடவு பகுதிக்கு வர சொன்னார்கள். இவர்களின் போன் நம்பர் கூலி தொழிலாளர்களுக்கு எப்படி கிடைத்தது என எவரும் கேட்கவில்லை. கணவர் மனைவியும் கணத்துக்கடவுக்கு சென்றனர். 3 பேர் இருந்தனர். தங்க முலாம் பூசிய 2 கிலோ கட்டியை காட்டினர். ரூபாய் 15 லட்சம் கேட்டனர். 5 லட்சம் ரூபாய் தான் தர முடியும் என கணவர் மனைவி பேரம் பேசினர். கிடைத்தவரை லாபம் என மோசடி கும்பலும் தலை அசைத்தது. பணத்தை பெற்று அங்கிருந்து தப்பினர். கட்டியை சோதித்த போது, அது முலாம் பூசியது என்ற உண்மை தெரிந்தது.ஷேக் அலாவுதீன் போலீசில் புகார் அளித்தனர் . போன் நம்பரை டிராக் செய்து , குற்றவாளிகள் நிஜாம், உசேன் அலி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரை கைது செய்தனர். கோவை
வாசகர் கருத்து