அரசியல் ஜனவரி 28,2022 | 10:59 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு , கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் உச்சபட்டமாக உழைத்தால் உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொறுப்பை பந்தாவுக்காக பயன்படுத்தினால் பதவி பறிக்கப்படும் என எச்சரித்துள்ளார். தேர்தல் பணியை விரைவுபடுத்துங்கள் ; கட்டமைப்பை வலுவாக்குங்கள். மாநில செயலர்கள் முதல் கிளை செயலர்கள் வரையிலான ஒவ்வொருவரும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வேட்பாளர்களாக பங்கு பெற வேண்டும். போட்டியிட முடியாமல் போனால், தகுதியான வேட்பாளரை நீங்களே அடையாளம் கண்டு முன்னிறுத்த வேண்டும். இவ்வாறு வேட்பாளர்களை முன்னிறுத்தும் நபர்களின் எண்ணிக்கை, நிர்வாகிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து