மாவட்ட செய்திகள் பிப்ரவரி 12,2022 | 15:23 IST
திருப்பத்தூர் மாவட்டம், பந்தாரபள்ளி பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மக்களை தேர்வு செய்தனர். இதில் அரசு ஊழியர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதனால் ஏழை மக்கள் பலருக்கு கிடைக்கவில்லை. அதிருப்தியடைந்த மக்கள் திருப்பத்தூர் - நாட்றம்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நாட்றம்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமாதானம் செய்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து