மாவட்ட செய்திகள் பிப்ரவரி 17,2022 | 13:40 IST
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' சார்பில், 45வது சென்னை புத்தகக் கண்காட்சி , சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது. விழாவில், சிறந்த பதிப்பாளருக்கான விருதை, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வழங்கி பேசுகையில், சென்னையைப் போல மதுரையில் 14 ஆண்டுகளும்; கோவையில் நான்கு ஆண்டுகளும் புத்தகக் கண்காட்சி நடந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த, மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். மதுரையில் 114 கோடி ரூபாயில், கருணாநிதி பெயரில் பிரமாண்ட நுாலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. நான் எழுதி இருக்கும் 'உங்களில் ஒருவன்' என்ற நுாலின் முதல் பாகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. அதில், 1976 வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை பதிவு செய்துள்ளேன். இந்த நுால் புத்தகக் காட்சிக்கும் விரைவில் விற்பனைக்கு வரும். என பேசினார். கண்காட்சியில் ஸ்டால்களை பார்வையிட்ட முதல்வரிடம், 'தினமலர் - வாரமலர்' அந்துமணி எழுதிய புத்தகங்களின் ஒரு பாகத்தை, 'தினமலர்' விற்பனை பிரிவு மேலாளர் நீலகண்டன் வழங்கினார். கண்காட்சி மார்ச் 6ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் 500 பதிப்பாளர்களின் 800 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து நுால்களுக்கும் 10 சதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து