மாவட்ட செய்திகள் மார்ச் 02,2022 | 19:00 IST
ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோயில் மாசி திருவிழா, கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்வான அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. எல்லையம்மன் கோயிலில் இருந்து மேட்டூர் சாலை வழியாக செல்லியாண்டியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அம்மனை அழைத்து வந்தனர். பக்தர்கள் உடலில் சேறு பூசியும், காய்கறி வேடம், கடவுளர்கள் வேடம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். ஒருவருக்கு ஒருவர் சேற்றினை பூசி விளையாடினர். ஊர்வலத்தில் சிறு குறு தொழில் செய்பவர்கள் வேண்டுதல் நிறைவேற காசு, பழம், மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை சூறை விட்டனர். பண்டிகையை முன்னிட்டு பவானி நகர பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
வாசகர் கருத்து