மாவட்ட செய்திகள் மார்ச் 06,2022 | 21:06 IST
தாராபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தேனி மாவட்டம் கம்பத்தில் அந்த அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.
வாசகர் கருத்து