மாவட்ட செய்திகள் மார்ச் 07,2022 | 13:26 IST
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தது. தலைவர் மற்றும் துணை தலைவர். தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளுவும், வாக்குவாதமும் ஏற்பட்டது. வாக்குப் பெட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டது. இதனால் செயல் அலுவலர் தேர்தலை ரத்து செய்தார். கவுன்சிலர்கள் மோதல் குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இரு கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து