மாவட்ட செய்திகள் மார்ச் 07,2022 | 14:07 IST
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உலிக்கல் கிராமத்தில் தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு சில நாட்களாக குட்டிகளுடன் கரடி குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் பகலில் கரடி உலா வருகிறது. இரவில் சத்துணவு மையங்களின் கதவுகளை உடைத்து, உணவு பொருட்களை காலி செய்து விட்டு செல்கிறது. இப்பகுதி தெருவிளக்கின்றி இருள் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். மாலை 6 மணிக்கு கதவுகளை பூட்டி விட்டு வீடுகளில் முடங்குகின்றனர். குடியிருப்பு பகுதியில் நமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து