மாவட்ட செய்திகள் மார்ச் 07,2022 | 00:00 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் வனசரகத்திற்கு உட்பட்ட சோளகனை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ஈரைய்யன். இவர் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக காப்புகாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த கரடி ஒன்று ஈரைய்யனை தாக்கியது. கூச்சல் சத்தம் கேட்டு வந்த மக்கள் கரடியை விரட்டி அவரை காப்பாற்றினர். காயமடைந்த ஈரைய்யன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பர்கூர் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து