மாவட்ட செய்திகள் மார்ச் 07,2022 | 21:24 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சர்வேயராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி. இவர், ஈரானி கிராமத்தை சேர்ந்த வாசுதேவனுக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து வாசுதேவன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை, சர்வேயர் வீட்டில் கொண்டுபோய் வாசுதேவன் கொடுத்தார். பணத்தை வாங்கிய போது பழனிச்சாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
வாசகர் கருத்து